ராகுல் காந்தி கருத்துக்கு எதிர்ப்பு; வீர சாவர்க்கர் சொந்த ஊரில் முழு அடைப்பு
வீர சாவர்க்கர் நாசிக்கில் உள்ள பகுர் என்ற ஊரை சேர்ந்தவர் என்ற நிலையில், அங்கு நேற்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது.
நாசிக்,
இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேயர் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் மராட்டியத்தில் நடைபெற்று வரும் நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
இதற்கு பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. வீர சாவர்க்கர் நாசிக்கில் உள்ள பகுர் என்ற ஊரை சேர்ந்தவர் என்ற நிலையில், அங்கு நேற்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது.
இதற்கு ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் சத்ரபதி சிவாஜி சவுக்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.