ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இந்தியாவின் நிலைமையை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டது: உமர் அப்துல்லா


ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இந்தியாவின் நிலைமையை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டது: உமர் அப்துல்லா
x
தினத்தந்தி 27 Jan 2023 9:44 AM GMT (Updated: 27 Jan 2023 9:45 AM GMT)

நாட்டின் நிலவும் சூழ்நிலையை மாற்றுவதையே ஒற்றுமை யாத்திரை நோக்கமாக கொண்டதாக உமர் அப்துல்லா கூறினார்.

பானிஹால்,

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியில் ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்ட தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, பின் செய்தியாளர்களை சந்திக்கையில் பேசியதாவது,

ஒற்றுமை யாத்திரையின் நோக்கம் ராகுல் காந்தியின் புகழை மேம்படுத்துவது அல்ல.. மாறாக நாட்டின் நிலவும் சூழ்நிலையை மாற்றுவதையே நோக்கமாக கொண்டது.

"நாங்கள் இந்த அணிவகுப்பில் இணைந்திருப்பது ஒரு தனிநபரின் உருவத்திற்காக அல்ல, மாறாக நாட்டின் உருவத்திற்காக."

சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆளும் கட்சிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. இது அவர்களின் அணுகுமுறையைக் காட்டுகிறது. என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அப்துல்லா கூறுகையில், "பிரிவு 370ஐ மீட்டெடுப்பதற்கான வழக்கை நீதிமன்றத்தில் நாங்கள் போராடுவோம். அரசாங்கம் இழுத்தடிக்கும் விதம் எங்களின் வழக்கு மிகவும் வலுவானது என்பதை நமக்குச் சொல்கிறது. "

கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டு தேர்தல்களுக்கு இடையே இதுவே மிக நீண்ட காலமாகும். பயங்கரவாதத்தின் உச்சக்கட்டத்தில் கூட அப்படி இல்லை.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தேர்தலுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது. நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, தேர்தலுக்காக யாசகம் எடுக்க விரும்பவில்லை. என்று அவர் கூறினார்.


Next Story