அக்னிவீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு


அக்னிவீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு
x

கோப்புப்படம்

அக்னிவீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில், 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை வழங்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

லெவல் 1 பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும்.

மேலும், முதல் பேட்ச் அக்னிவீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகளும், அதற்கடுத்த பேட்ச் அக்னிவீரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.


Next Story