ரெயில்வேயில் 9000 காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு - ரெயில்வே அமைச்சகம் விளக்கம்


ரெயில்வேயில் 9000 காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு - ரெயில்வே அமைச்சகம் விளக்கம்
x

ரெயில்வே காலிப்பணியிடங்கள் குறித்த செய்திகளுக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

ரெயில்வே பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு பல்வேறு சமூக வலைத் தளங்களில் வெளியானது.

இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் குறித்த செய்திகளுக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

ரெயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎப்) 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி பரவி வருகிறது.

ரெயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரெயில்வே அமைச்சகம் அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம், அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story