என்னை எப்படியாவது காப்பாத்துங்க...! இலங்கை அரசுக்கு நித்யானந்தா கடிதம் ...!


என்னை எப்படியாவது காப்பாத்துங்க...!  இலங்கை அரசுக்கு  நித்யானந்தா கடிதம் ...!
x
தினத்தந்தி 3 Sep 2022 7:42 AM GMT (Updated: 3 Sep 2022 7:53 AM GMT)

இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு நித்யானந்தா கடிதம் எழுதியது தெரியவந்து இருக்கிறது.

புதுடெல்லி

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்ட அவர் குருபூர்ணிமா நாளான ஜூலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அறிவித்தார்

ஜூலை 13 ம் தேதி குருபூர்ணிமா நிகழ்வில் நிச்சயம் மீண்டும் தனது பக்தர்கள் மத்தியில் பேசினார். அப்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் மறு பிறவி எடுத்துள்ளதாகவும் பேசினார்.

இந்த நிலையில், இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியது தெரியவந்து இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபருக்கு நித்யானந்தா எழுதி இருக்கிறார்.

அதில், "ஸ்ரீ நித்யானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. கைலாசாவில் நித்யானந்தாவில் போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டு உள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும்." என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story