வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
குடகு:-
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே என்ற கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தவர்களுக்கு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி மனோஜ்குமார் மீனா கலந்து கொண்டு, வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் பயன், வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது, 18 வயதுக்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலேசனை வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து பொன்னம்பேட்டை, சினிகாட்லு, சோட்டேபரேகாடி, மஜ்ஜிகே ஹல்லாகாடி ஆகிய கிராமங்களூருக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story