ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
Published on

மும்பை:

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் மும்பையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இக்கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

ரெப்போ வட்டி விகிதத்தை எந்த மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக தொடர நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி தொடர்பான கணிப்பானது, முந்தைய 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நிறைவடையும் காலாண்டுகளுக்கான வளர்ச்சி முறையே 6.5 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் குறைந்தாலும், பல நாடுகளில் இலக்கை விட அதிகமாகவே பணவீக்கம் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதமாகும். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com