உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்களுக்கு முக்கிய பங்கு; முதல்-மந்திரி ஆதித்யநாத் பேச்சு


உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்களுக்கு முக்கிய பங்கு; முதல்-மந்திரி ஆதித்யநாத் பேச்சு
x

சமூக ஊடகங்களின் செல்வாக்கு பரந்த அளவில் சென்றடைந்தும், எல்லையற்றும் உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் சமூக ஊடகங்களில் செல்வாக்கு படைத்தவர்களிடையே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, 20 ஆண்டுகளுக்கு முன் அச்சு ஊடகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

அதன்பின் மின்னணு ஊடகம் வந்தது. முதலில், நிறைய சேனல்கள் இல்லை. ஆனால், காலம் செல்ல செல்ல, அந்த எண்ணிக்கை வளர்ந்து வந்தது.

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் டிஜிட்டல் ஊடகம் விரைவான வளர்ச்சியை அடைந்து உள்ளது என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் அதிகரித்து உள்ளது. அதில், சமூக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கின்றது என கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களால், சீனாவில் பெரிய எண்ணிக்கையில் தற்போது யோகா வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆயுஷ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஆயுர்வேதமும், அதிக பிரபலம் அடைந்து வருகிறது என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.


Next Story