போலீஸ்காரரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் 'அபேஸ்'


போலீஸ்காரரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 28 Nov 2022 9:20 PM GMT (Updated: 28 Nov 2022 9:21 PM GMT)

மண்டியாவில் நூதன முறையில் போலீ்ஸ்காரரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.48 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மண்டியா:-

கிரிடிட் கார்டு

மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜசாகர் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர்(வயது 46). பாண்டவபுரா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். பாரத ஸ்டேட் இவருக்கு வங்கி கணக்கு உள்ளது. இந்த வங்கி கணக்கை வைத்து கிரடிட் கார்டு ஒன்று வாங்கியிருந்தார். ஆனால் அந்த கிரடிட் கார்டை அவர் பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 11-ந் தேதி சுதாகரின் செல்போனுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர் பேசினார். அந்த அழைப்பை ஏற்று சுதாகர் பேசினார். அப்போது அந்த நபர் உங்கள் கிரடிட் கார்டிற்கான வரிகள் பிடித்தம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறினார். அதனை ஏற்க மறுத்த சுதாகர், நான் கிரடிட் கார்டை பயன்படுத்தவே இல்லை என்று பதில் அளித்தார்.

ரூ.1.48 லட்சம் மோசடி

அப்போது அந்த நபர், உங்கள் கிரடிட் கார்டில் உள்ள 16 இலக்க எண்ணை கொடுங்கள். சரி பார்த்து சொல்கிறேன் என கூறினார். இதைக்கேட்ட சுதாகர் கிரடிட் கார்டு எண்ணை தெரிவித்தார். இதையடுத்து சில நிமிடம் கழித்து சுதாகரின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

அதில் ரூ.1.48 லட்சம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சுதாகர் இது குறித்து மண்டியா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story