வாலிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
வாலிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி
Published on

சிவமொக்கா-

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபரின் வாட்ஸ்-அப்புக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு லிங் இருந்தது. மேலும் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள டாஸ்க்குகளை முடித்தால், ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய அந்த வாலிபர், அந்த லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் மர்மநபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.2.60 லட்சம் வரை பரிமாற்றம் செய்துள்ளார்.

வாலிபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி நபர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.2.60 லட்சம் பரிமாற்றம் செய்து உள்ளார். பின்னர் ஆன்லைனில் வேலை உறுதியானதாக அவருக்கு குறுந்தகவல் வந்தது. அதன்பிறகு அந்த நபரை வாலிபரால் தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும் அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. இதனால், வேலை வாங்கி தருவதாக கூறி மர்மநபர் ரூ.2.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com