குஜராத் தேர்தல்: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.75 லட்சம் பறிமுதல்
குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபட்ட 75 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பணப்பட்டுவாடா, முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் இன்று அதிகாரிகள் வழக்கமான வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 75 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 75 லட்ச ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story