இந்தோனேசியா நிலநடுக்கம்: பலர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் - பிரதமர் மோடி
இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை ஜாவா தீவுகள் ஆளுநர் ரித்வான் காமில் உறுதிப்படுத்தியுள்ளார். நிலநடுக்கத்தில் 2200 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5300 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜாவா ஆளுநர் ரித்வான் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என கூறியுள்ளார்.