சேலம் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை; தொழிலாளி கைது


சேலம் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை; தொழிலாளி கைது
x

மங்களூருவில் பணத்தகராறில் சேலம் வியாபாரிைய கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

மங்களூரு:

மண் விளக்கு வியாபாரி கொலை

தமிழ்நாடு சேலத்தை சேர்ந்தவர் மாயவேல் பெரியசாமி(வயது 52). மண் விளக்கு வியாபாரியான இவர், தனது மனைவியுடன் கடந்த மாதம்(அக்டோபர்) 14-ந்தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு வியாபார விஷயமாக வந்தார். அதன்படி அந்த தம்பதி மங்களூருவில் அலகே மார்க்கெட் பகுதியில் மண் விளக்கு விற்று வந்தனர்.

இதேபோல் பல்லாரி மாவட்டம் ஹூவினஅடஹள்ளியை சேர்ந்தவர் ரவி(வயது 42). இவர், மங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையே ரவி, மாயவேல் பெரியசாமியிடம் மண் விளக்குகள் வாங்கியுள்ளார். இதனால் மாயவேல் பெரியசாமிக்கும், ரவிக்கும் இடையே பண தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ரவி, மாயவேல் கருப்பசாமியை கூளூர் மைதானத்திற்கு அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாதபோது கத்தியால் குத்தி கொலை செய்தார்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த மங்களூரு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையான மாயவேல் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கலில் மாயவேல் கருப்பசாமியை ரவி கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story