ஒடிசாவில் 740 ரோஜா மலர்களால் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி!


ஒடிசாவில் 740 ரோஜா மலர்களால் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி!
x
தினத்தந்தி 10 Sep 2022 11:00 AM GMT (Updated: 10 Sep 2022 11:01 AM GMT)

ராணியின் அழகிய உருவம் மணலில் உருவாக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

புவனேஷ்வர்,

இங்கிலாந்து அரியணையை நீண்ட காலமாக அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் வியாழக்கிழமை காலமானார்.

ஒடிசாவின் பூரியைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான மனாஸ் சாஹூ, கோல்டன் சீ பீச் என்றழைக்கப்படும் தங்கக் கடற்கரையில் எலிசபெத் ராணியின் அழகான, பிரமாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.ராணியின் அழகிய உருவம் மணலில் உருவாக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மனாஸ் சாஹூ, "ஒடிசாவின் பூரி கடற்கரையில் எனது மணல் கலையின் மூலம் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் ராணியின் அழகான சிற்பத்தை உருவாக்கினார். அவர் பூரி கடற்கரையில் ராணியின் அழகிய உருவத்தை மணலில் உருவாக்கி அதை 740 ரோஜாக்களால் அலங்கரித்தார்.

இந்த மணல் சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


Next Story