பெண் சாட்சிக்கு மிரட்டல் விடுத்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு

சாட்சியை மிரட்டியதாக சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,
மும்பை வக்கோலா பகுதியில் பத்ரா மோசடி வழக்கின் சாட்சியான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 15-ந் தேதி வந்த பத்திரிகையில் மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், அமலாக்கத்துறை முன் வாய் திறந்தால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மிரட்டல் கடிதத்திற்கும், சஞ்சய் ராவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பெண் வக்கோலா போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று அவர் புகார் தொடர்பாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் மிரட்டல் கடிதம் தொடர்பாக சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story






