நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்தார் சசி தரூர் வலியால் அவதி


நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்தார் சசி தரூர்  வலியால் அவதி
x

தாங்க முடியாத வலி காரணமாக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள மாநிலம், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் (வயது 66) நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்றிருந்தபோது வழுக்கி விழுந்து விட்டார்.

இதனால் அவரது இடது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத வலி காரணமாக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனால் நேற்று அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. மேலும் வார இறுதியில் தனது திருவனந்தபுரம் தொகுதிக்கு செல்லவிருந்த பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.

இந்த தகவல்களை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story