திகார் சிறையில் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு சகல வசதிகளா? மணிஷ் சிசோடியா விளக்கம்


திகார் சிறையில் மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு சகல வசதிகளா? மணிஷ் சிசோடியா விளக்கம்
x

றையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்வது போல வீடியோ வெளியான நிலையில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்வது போல வீடியோ வெளியான நிலையில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.

பண மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறையி சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மணிஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.


Next Story