"சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0" அறிமுகம்
அரசு துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்டவை சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.௦ செயலி மூலம் பெறலாம்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்டவை இந்த செயலி பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவிக்கையில்,
"சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு தயாராக உள்ளது. இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியில் இந்த முறை கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 செயலி இன்னும் ஒரு வாரத்தில் ஆப்பிள்/ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும். அனைத்து சட்ட அதிகாரிகளும் தங்களது சொந்த அணுகலை பெறலாம்.
வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை இந்த செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். சட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் சட்ட அதிகாரிகள் தங்கள் வழக்குகளின் நிலை, உத்தரவு, தீர்ப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை ஆகியவற்றை இந்த செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.