குஜராத் தொங்கு பால விபத்து: விசாரணை குழு அமைக்க கோரிய மனுவை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


குஜராத் தொங்கு பால விபத்து: விசாரணை குழு அமைக்க கோரிய மனுவை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

குஜராத் தொங்கு பால விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்க கோரிய மனுவை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

குஜராத்தின் மோர்பி நகரில் கடந்த மாதம் 30-ந்தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் 141 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரி வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி முன் வைத்த வாதங்களையும், குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விபத்து தொடர்பாக குஜராத் ஐகோர்டடு தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கில் இடையீடு செய்து கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே பொதுநல மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.


Next Story