உ.பி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்- போலீசார் விசாரணை


உ.பி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்- போலீசார் விசாரணை
x

கோப்புப்படம் 

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் மேலாளரை போலீசார் தேடிவருகின்றனர்.

காசியாபாத்,

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவியை அதே பள்ளியின் மேலாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பள்ளியின் மேலாளரான ஷஹாதத் என்பவர், பள்ளி நேரம் முடிந்ததும் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.

பள்ளி மேலாளரின் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த விஷயத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

இதனை அறிந்த ஷஹாதத், தனது வீட்டில் இருந்து தலைமறைவானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஷஜாதத்தை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story