நேத்ராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
பண்ட்வால் அருகே நேத்ராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் ஒருவர் உயிரிழந்தான்.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பி.சி.ேராடு பர்லியா மத்தா பகுதியை சேர்ந்தவர் சல்மான் (வயது 15). இவன் அந்தப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று பிரம்மரகோட்லு பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றுக்கு தனது நண்பர்களுடன் சல்மான் குளிக்க சென்றான். அப்போது சல்மான், ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய நண்பர்கள், சல்மானை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் சல்மான், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story