உ.பி-ஆசிரியருக்காக பிளாஸ்டிக் சேர்களை கொண்டு பாலம் அமைத்த பள்ளி மாணவர்கள்..!
பிளாஸ்டிக் சேர்களை கொண்டு மாணவர்கள் அமைத்த பாலத்தில் ஆசிரியர் நடந்துசெல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பிளாஸ்டிக் சேர்களை கொண்டு தொடக்கப்பள்ளி மாணவர்கள் அமைத்த பாலத்தில் ஆசிரியர் ஒருவர் நடந்துசெல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தொடர் மழை காரணமாக பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், ஆசிரியரை அழைத்துவர மாணவர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். ஆசிரியரின் இத்தகைய செயலால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story