கடும் பனி: பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அறிவிப்பு


கடும் பனி:  பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அறிவிப்பு
x

பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சண்டிகர்,

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படியும் விபத்துகள் நேரிட்டு வருகின்றன.

இந்தநிலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சமயத்தில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என அம்மாநில முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.


Next Story