காஷ்மீரில் குலாம்நபி கட்சிக்கு தாவிய 17 நிர்வாகிகள் மீண்டும் காங்கிரசில் ஐக்கியம்

காஷ்மீரில் குலாம்நபி கட்சிக்கு தாவிய 17 நிர்வாகிகள் மீண்டும் காங்கிரசில் ஐக்கியம்
x
தினத்தந்தி 7 Jan 2023 4:15 AM IST (Updated: 7 Jan 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

குலாம்நபி ஆசாத் மீண்டும் காங்கிரசில் சேர பேச்சு நடக்கிறதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அப்படி எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம்நபி ஆசாத், அதிலிருந்து விலகி ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அதில், காஷ்மீரைச் சேர்ந்த பல தலைவர்கள் ஐக்கியமாகினர்.

இப்போது அவர்களில் பலரும், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினர். அவர்களை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வரவேற்றார்.

குலாம்நபி ஆசாத் மீண்டும் காங்கிரசில் சேர பேச்சு நடக்கிறதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அப்படி எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "19 தலைவர்கள் காங்கிரசில் மீண்டும் சேருவதாக இருந்தது, 17 பேர் மட்டுமே டெல்லி வர முடிந்தது. அவர்கள் கட்சியில் மீண்டும் சேர்ந்துள்ளனர். இது முதல் கட்டம். மற்றவர்கள் விரைவில் சேருவார்கள்" என்று கூறினார்.

காங்கிரசில் மீண்டும் ஐக்கியமானவர்களில் காஷ்மீர் முன்னாள் துணை முதல்-மந்திரி தாரா சந்த், முன்னாள் மந்திரி பீர்ஜாதா முகமது சயீத் உள்ளிட்டோர் அடங்குவர்.

Next Story