2024-ல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறேனா? சரத் பவார் விளக்கம்


2024-ல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறேனா? சரத் பவார் விளக்கம்
x

பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மட்டுமே நான் ஈடுபடுவேன் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மாற்று அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த மூன்றாவது அணியில் பிரதமர் வேட்பாளராக சரத் பவார் முன்னிறுத்தப்படலாம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சரத் பவார் இது குறித்து கூறியதாவது:- இந்த வயதில் எந்த பொறுப்பையும் ஏற்க நான் விரும்பவில்லை.

பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மட்டுமே நான் ஈடுபடுவேன். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டது. நல்ல நாட்கள் வரும்.. கிராமப்புறங்களுக்கு இணைய வசதி, கழிப்பறைகள், அனைத்து வீட்டிற்கும் குடிநீர் வசதி,மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை" என்றார்.


Next Story