சிவசேனா சின்னம் முடக்கம்: உத்தவ் தாக்கரேயின் மனு தள்ளுபடி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


சிவசேனா சின்னம் முடக்கம்: உத்தவ் தாக்கரேயின் மனு தள்ளுபடி  டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Nov 2022 9:15 PM GMT (Updated: 15 Nov 2022 9:15 PM GMT)

வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார்.

புதுடெல்லி,

சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரரின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் ராஜு நய்யர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, கட்சியின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இருதரப்பினரின் நலன் கருதி நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு விரைந்து தீர்வுகாணவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.


Next Story