புகாருக்கு ஆளான கலெக்டருக்கு விழா மேடையில் இடமாற்ற உத்தரவு: முதல்-மந்திரி அதிரடி


புகாருக்கு ஆளான கலெக்டருக்கு விழா மேடையில் இடமாற்ற உத்தரவு: முதல்-மந்திரி அதிரடி
x

கோப்புப்படம்

மத்தியபிரதேசத்தில் புகாருக்கு ஆளான கலெக்டருக்கு விழா மேடையிலே முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இடமாற்ற உத்தரவை பிறப்பித்தார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்ட கலெக்டராக இருந்து வந்தவர், தருண் பட்நாகர்.

இவர் தனது கடமைகளை சரிவர செய்வதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது அவரையும், அவரைப்போன்று புகாருக்கு ஆளான தாசில்தார் சந்தீப் சர்மாவையும் இடமாற்றம் செய்வதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணையும் நடத்தப்படும் என அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட கலெக்டரையும், தாசில்தாரையும் மேடையில் வைத்துக்கொண்டே அவர்கள் மீது நடவடிக்கையை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தது, விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story