தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனின் 4 வயது மகனை கொன்ற கொடூரன் - கேரளாவில் அதிர்ச்சி
கேரளாவில் தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனின் 4 வயது மகனை கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு,
கேரளாவில் தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனின் 4 வயது மகனை கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு அருகில் உள்ள பள்ளிக்காவல் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெய்பிரகாஷ் மற்றும் ஜித்தேஷ். நண்பர்களான இருவரும் ஒன்றாக சேர்ந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். அப்போது, தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெய்பிரகாஷின் மனைவி அனிலா, தனது 4 வயது குழந்தை ஆதிதேவ் உடன் வெளியே செல்லும் போது ஜித்தேஷ் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், ஜித்தேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்கியதில் அனிலாவும், ஆதிதேவும் படுகாயம் அடைந்தனர்.
பின்பு அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயதான ஆதிதேவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் அடிப்படையில் ஜித்தேஷை கைது செய்த போலீசார், அவர் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.