சிக்கமகளூரு தொகுதியில் சித்தராமையா போட்டியிட வேண்டும்; காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் கோரிக்கை
வரும் சட்டசபை தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் சித்தராமையா போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு மாநில தலைவர் சச்சின் மிகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் பிறந்த நாள் பவளவிழா, தாவணகெரேயில் பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்து கொண்ட நான், சித்தராமையாவை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினேன்.
அந்த கடிதத்தில் வரும் சட்டசபை தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் சித்தராமையா போட்டியிட வேண்டும் என்றும், 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை தோற்கடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். சிக்கமகளூருவுக்கும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கும் ஒரு தொடர்பு உள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் சித்தராமையா போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story