இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6, 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து ,809 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

நேற்று 7 ஆயிரத்து 219 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6 ஆயிரத்து 809 ஆக குறைந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,44,49,726 லிருந்து 4,44,56,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 8,414 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,65,016 லிருந்து 4,38,73,430 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 26 பேர் பலியாகினர். இதுவரை 5,27,991 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56,745 லிருந்து 55,114 ஆக குறைந்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 213 கோடியே 20 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 19,35,814 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com