பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்; சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்; சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:48 PM GMT)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிக்கமகளூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே உள்ள காபி தோட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என 4 பேர் கோஷமிட்டு கொண்டிருந்தனர். இதனை கேட்ட அப்பகுதியினர், பாலேஒன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜர் அலி, ஆகில் உத்தின் மற்றும் மேலும் 2 சிறுவர்கள் என்பதும், உலகப்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு நுழைந்ததையும், இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்து இந்தியா வெளியேறியதை கொண்டாடும் வகையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story