சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1.2 கோடி மதிப்புள்ள தங்கம் வாரனாசியில் சிக்கியது


சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1.2 கோடி மதிப்புள்ள தங்கம் வாரனாசியில் சிக்கியது
x

screengrab from video tweeted by @cusprevlucknow

ஷார்ஜாவில் இருந்து ரூ.1.12 கோடி மதிப்புள்ள தங்கத்தை மறைத்து கொண்டுவந்த நபரை வாரனாசி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.

வாரணாசி,

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், ஷார்ஜாவில் இருந்து வாரணாசிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவரிடம் இருந்து 2.33 கிலோ 99.9 சதவீதம் சுத்தமான தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

அந்த நபர், மொத்தம் 20 தங்கக் கட்டிகளை இடுப்பிற்கு அடியில் மறைத்து வைத்து கொண்டிருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். பயணியின் தனிப்பட்ட சோதனையின் போது இந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கக்கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.1.12 கோடி ஆகும்.

இதையடுத்து தங்கத்தை கடத்திவந்த நபரை கைதுசெய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story