மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரரை அடித்து கொலை செய்த கும்பல்


மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரரை அடித்து கொலை செய்த கும்பல்
x

மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர்களை தட்டிக்கேட்ட ராணுவ வீரரை அடித்து கொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அகமதாபாத்

குஜராத்தில், தன்னுடைய மகள் தொடர்பான ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான தகவலின்படி கடந்த சனிக்கிழமையன்று, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை, சக்லசி கிராமத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருக்கின்றனர். இந்த நிலையில், தன் மகள் தொடர்பான ஆபாச வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புப் படை வீரர் அன்றிரவே தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களுடன் நேராக அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது இரு குடும்பத்தாரும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், சிறுவனின் குடும்பத்தினர் தாக்கியதில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இதனை எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து இது தொடரபாக் 7 பேரை கைது செய்து உள்ளனர்.

கொலை மற்றும் கலவரம் செய்த குற்றச்சாட்டில் ஏழு பேரில் இரண்டு பெண்களும் அடங்குவர்.குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story