சொத்திற்காக வளர்ப்பு தாயை கம்பியால் அடித்து கொன்ற மகன்: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்


சொத்திற்காக வளர்ப்பு தாயை கம்பியால் அடித்து  கொன்ற மகன்: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
x

சொத்திற்காக வளர்ப்பு தாயை கரண்ட் ஷாக் கொடுத்து கொடுமை படுத்தியதோடு, இரும்புக்கம்பியால் மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்நாடு,

ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி பாய். இவர் தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார்.

தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்து இருக்கிறார். இதனிடையே லட்சுமிபாயுக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லட்சுமி பாயிற்கு கரண்ட் ஷாக் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

அப்போதும் லட்சுமிபாய் மறுத்ததால், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தத்து நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story