பாலியல் தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து தன்னை 2 இளைஞர்கள் காப்பாற்றியதாக வெளிநாட்டு பெண் யூ-டியூபர் மகிழ்ச்சி


பாலியல் தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து தன்னை 2 இளைஞர்கள் காப்பாற்றியதாக வெளிநாட்டு பெண் யூ-டியூபர் மகிழ்ச்சி
x

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து தன்னை 2 பேர் காப்பாற்றியதாக தென்கொரியா பெண் யூ-டியூப்பர் டுவிட்டரில் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு விருந்து அளித்து புகைப்படத்தை பதிவிட்டார்.

பாலியல் தொல்லை

தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹயோஜியோ இரவு 11.30 மணி அளவில் கார் பகுதியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் (லைவ்) நேரலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். அப்பெண் அவர்களிடம் இருந்து நைசாக நழுவ தொடங்கினார். இருப்பினும் வாலிபர்கள் பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

கவுரவித்த பெண் யூ-டியூபர்

இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக பாந்திரா பகுதியை சேர்ந்த மொபீன் சந்த் முகமது, முகமது நக்யூப் அன்சாரி ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண், தனது கையை பிடித்து தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து இந்திய இளைஞர்கள் ஆதித்யா மற்றும் அதர்வா ஆகிய 2 பேர் தன்னை காப்பாற்றியதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். தன்னை காப்பற்றிய அவர்களை கவுரவிக்க ஓட்டலுக்கு வரவழைத்து மதிய விருந்து கொடுத்தார். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து டுவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.


Next Story