வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x

குடகில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

குடகு:-

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு(2022) நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. அதன்படி குடகு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மடிகேரியில் நடந்தது. காந்தி மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் திம்மய்யா சர்க்கிள் வரை நடந்தது. இந்த ஊர்வலத்தை முன்நின்று நடத்திய மாவட்ட கலெக்டர் சதீஸ் கூறியதாவது:-

குடகில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக நவம்பர் 12-ந் தேதி(நாளை), 20-ந் தேதி மற்றும் டிசம்பர் 3-ந் தேதி, 4-ந்தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த பெயர் சேர்க்கும் முகாம் நடத்த 542 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். திருத்தம் செய்ய விரும்புபவர்களும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story