கன்னட ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை


கன்னட ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி  மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை
x

கன்னட ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. கர்நாடகத்தின் காவல் தெய்வம் என்றழைக்கப்படும் சாமுண்டீஸ்வரி கோவிலில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. இந்த நிலையில் கன்னட ஆடி மாதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைதோறும் சாமுண்டீஸ்வரி கோவிவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20-ந்தேதி, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வர்தந்தி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கன்னட ஆடியின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை கொண்டாடப்பட்டது. அதிகாலையில் நடை திறந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதைனகள் செய்யப்பட்டது.

பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். அதேபோல் மைசூரு மன்னர் குடும்பத்தினர், முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா மற்றும் நடிகர் தர்ஷன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். நடிகர் தர்ஷன் வருகையால், கோவிலில் பொதுமக்கள் அவருடன் போட்டிபோட்டுகொண்டு செல்பி எடுத்தனர்.


Next Story