பங்கு வர்த்தகம்; புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு


பங்கு வர்த்தகம்; புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு
x
தினத்தந்தி 28 Nov 2022 6:42 AM GMT (Updated: 28 Nov 2022 6:46 AM GMT)

ஆசிய பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளபோதும் மும்பை பங்கு வர்த்தகம் இன்று புதிய உச்சம் தொட்டு சென்செக்ஸ் குறியீடு 62,498 புள்ளிகளை அடைந்திருந்தது.

மும்பை,


ஆசிய பங்கு சந்தைகளில் வார தொடக்க நாளான இன்று வர்த்தகம் குறைந்தே காணப்பட்டது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, அதன் தொடர்ச்சியாக அரசின் கொரோனா ஊரடங்கு அமல் மற்றும் அரசின் கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகியவை எதிரொலியாக இந்த நிலை காணப்படுகிறது என கூறப்படுகிறது. பங்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

எனினும், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் தொட்டு உள்ளது. இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 149.44 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் உயர்ந்து 62,498 புள்ளிகளாக இருந்தது.

எண்ணெய் மற்றும் எரிவாயு, தானியங்கி துறை இரண்டும் சென்செக்ஸ் மதிப்பில் 1% லாபத்துடன் காணப்பட்டன. எனினும் உலோக துறை சார்ந்த வர்த்தகம் சற்று பலவீனமடைந்து காணப்பட்டது.

தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு காலை 11 மணியளவில் 37 புள்ளிகள் அல்லது 0.20 சதவீதம் உயர்வடைந்து 18,549.85 புள்ளிகளாக இருந்தது. இவற்றில் 34 பங்குகள் குறியீட்டில் முன்னேற்றம் அடைந்து லாப நோக்குடன் காணப்பட்டன. எனினும் 16 பங்குகள் சரிவடைந்து காணப்பட்டது.

எஸ்.பி.ஐ. லைப், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பி.பி.சி.எல். ஆகியவை லாபத்துடன் இருந்தன.

எனினும், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், எச்.டி.எப்.சி., ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை சரிவடைந்து இருந்தன.


Next Story