பெண் மீது தெருநாய்கள் காட்டும் அன்பு - வீடியோ
தெருநாய்களுக்கு உணவளிக்கும் பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அன்று நட்பை வெளிப்படுத்தும் விதமாக பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டனர்.
அந்த வகையில், ஹர்ஷ் கோயங்கா என்பவர் பகிர்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், 10- க்கும் அதிகமாக தெரு நாய்கள் ஒரு பெண்ணை கட்டிபிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த நாய்களுக்கு உணவளித்து வருகிறார். எனவே அந்த நாய்கள் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு செய்கிறது.
நண்பர்கள் தினத்தையொட்டி இந்த வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்ததற்காக ஹர்ஷ் கோயங்காவுக்கு பலரும் நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக இந்த வீடியோவை அஜய் ஜோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story