மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை- போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை


மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை-  போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூரு: ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இறுதி போட்டி வருகிற 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. விடுமுறை நாளில் இறுதி போட்டி நடப்பதால், அந்த போட்டியை பார்க்க பப், மதுபான விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது கிரிக்கெட் போட்டியை மதுஅருந்திவிட்டு வாடிக்கையாளர்கள் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வருகிற 13-ந் தேதி விடுமுறை நாளில் பெங்களூருவில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு போக்குவரத்து போலீசார் டுவிட்டர் பதிவு மூலமாக எச்சரித்துள்ளனர். வருகிற 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களிலும் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.



Next Story