குஜராத்தில் பாஜக அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு அலை வீசுகிறது - அசோக் கெலாட்


குஜராத்தில் பாஜக அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு அலை வீசுகிறது - அசோக் கெலாட்
x
தினத்தந்தி 3 Dec 2022 7:01 PM GMT (Updated: 3 Dec 2022 7:01 PM GMT)

குஜராத்தில் பாஜக அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு அலை வீசுகிறது என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

கோடா,

குஜராத்தில் பாஜக அரசுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு அலை வீசுகிறது. அதனால் தான் பிரதமர் மோடி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று மாலை ராஜஸ்தான் மாநில எல்லையில் நுழைகிறது. இதற்கான ஆயத்த பணிகளை பார்வையிட்ட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, குஜராத்தில் பாஜக அரசுக்கு எதிரான அலை மிகவும் வலுவாக வீசுகிறது. அதனால் தான் பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் பல இடங்களுக்கு செல்கிறார். சமீபத்தில், அவர் 50 கிமீ தூரம் மெகா பேரணி நடத்தினார். ஏன் இந்த நிலை என்று யோசிக்க வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பிரதமர் மோடி புறக்கணித்துவிட்டு, குஜராத்தில் முகாமிட்டு உள்ளதின் காரணம் என்ன? தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயம் மோடிக்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஜாலாவரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக காங்கிரஸ் கட்சி பல தியாகங்களை செய்துள்ளது. அந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் செல்கிறார் என அவர் தெரிவித்தார்.


Next Story