மாணவிகளின் கழிவறைக்குள் புகுந்து வீடியோ எடுத்த மாணவர் பிடிபட்டார்
பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் கழிவறைக்குள் புகுந்து வீடியோ எடுத்த மாணவர் பிடிபட்டார்
பெங்களூரு
பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து அவர்களை வீடியோ எடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கடந்த காலங்களில் கழிவறைக்குள் எட்டிப்பார்த்தபோது பிடிபட்டு உள்ளார். மேலும் அவர் மன்னிப்பு கடிதம் சமர்ப்பித்த பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இப்போது வீடியோ எடுத்து மாட்டிக் கொண்டார்.
Related Tags :
Next Story