புதுச்சேரியில் மாணவர் மயங்கி விழுந்த விவகாரம்: இனி வருத்தி எடுக்க வேண்டாம் - துணை நிலை கவர்னர் தமிழிசை வேண்டுகோள்


புதுச்சேரியில் மாணவர் மயங்கி விழுந்த விவகாரம்: இனி வருத்தி எடுக்க வேண்டாம் - துணை நிலை கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
x

அரசு விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் மாணவர்களை வெயிலில் நிறுத்தி வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று துணை நிலை கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மாணவர் தின விழா தொடங்க சற்று கால தாமதமானதால் மாணவர் மயங்கி விழுந்த செய்தியறிந்து வருத்தம் அடைந்ததாக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கால தாமதத்திற்கு சில நடைமுறை சிக்கல்களே காரணம் என்று தெரிவித்த அவர், இனிமேல் இத்தகைய அரசு விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் இது போன்ற அசவுகரியங்கள் நிகழாமல் இருக்க மாணவர்களை வெயிலில் நிறுத்தி வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றால் மட்டும் போதுமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story