டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்


டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்
x

டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கற்றவர்கள் பயிற்சி மருத்துவ காலத்தை 2 ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலேயே பயற்சி எடுக்க வேண்டும் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி எப்.எம்.ஜி.இ. (ஸ்கிரீனிங்) தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மருத்துவ பயிற்சிக்கு மிகக்குறைந்த அளவிலேயே வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதனால் அந்த மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேற 10 ஆண்டுகள் வரை ஆவதாக தெரிகிறது. இதனைத் தவிர்த்து, விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் டெல்லிக்கு வந்து தேசிய மருத்துவ ஆணையம் முன் குவிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் திடீரென போராட்டம் நடத்த தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்தும் பல மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story