கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் இன்று 14 ஆயிரத்து 766 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 812 பேருக்கும். மைசூருவில் 33 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகல்கோட்டை, பெங்களூரு நகர், கோலாரில் தலா ஒருவரும், தார்வாரில் 2 பேரும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 1,711 பேர் குணம் அடைந்தனர். 9 ஆயிரத்து 880 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 7.59 ஆக உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து இருப்பதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story