'ஷாப்பிங்' அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தற்கொலை


ஷாப்பிங் அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

பெங்களூருவில் ‘ஷாப்பிங்’ அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் 'ஷாப்பிங்' அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

'ஷாப்பிங்' அழைத்து செல்லும்படி...

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனந்தபுராவில் வசிக்கும் தம்பதியின் மகள் வைஷாலி(வயது 11). அந்த தம்பதிக்கு மேலும் 2 குழந்தைகள் உள்ளனர். தனியார் பள்ளி ஒன்றில் வைஷாலி 5-ம் வகுப்பு படித்து வந்தாள். வைஷாலியின் தந்தை கூலித் தொழிலாளி ஆவார். திருவிழாவுக்காக சிறுமி வைஷாலிக்கு, அவரது தந்தை துணி வாங்கி கொடுத்திருந்தார். அன்றைய தினம் மற்ற 2 குழந்தைகளுக்கும் துணி எடுத்து கொடுக்கவில்லை.

இதையடுத்து, நேற்று முன்தினம் தனது மற்ற 2 குழந்தைகளுக்கும் துணி வாங்கி கொடுப்பதற்காக அந்த தம்பதியினர் வெளியே புறப்பட்டு சென்றனர். அப்போது தனக்கு துணி வாங்கி கொடுத்திருந்தாலும், தன்னையும் 'ஷாப்பிங்' அழைத்து செல்லும்படியும், மற்றொரு ஆடை வாங்கி கொடுக்கும்படியும் வைஷாலி தனது தந்தையிடம் கேட்டு இருக்கிறாள்.

மாணவி தற்கொலை

ஆனால் வைஷாலியை, அவரது தந்தை 'ஷாப்பிங்' அழைத்து செல்லாமல், மற்ற 2 குழந்தைகளை மட்டும் அழைத்து சென்றிருந்தார். இதனால் வைஷாலி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு மாணவி வைஷாலி தற்கொாலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த தம்பதி வீட்டுக்கு திரும்பிய போது தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்கள்.

போலீஸ் விசாரணையில், ஷாப்பிங் அழைத்து செல்லாததாலும், கூடுதலாக ஆடை வாங்கி கொடுக்காததாலும் வைஷாலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story