மணமகள் வீட்டின் அருகே தூக்குப்போட்டு ஐ.டி.ஊழியர் தற்கொலை


மணமகள் வீட்டின் அருகே தூக்குப்போட்டு ஐ.டி.ஊழியர் தற்கொலை
x

திருமணத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல் தாங்கள் வாங்கிய ரூ.10 லட்சத்தையும் தர மறுத்ததால் மணமகள் வீட்டின் அருகே தூக்குப்போட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு:

திருமணத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல் தாங்கள் வாங்கிய ரூ.10 லட்சத்தையும் தர மறுத்ததால் மணமகள் வீட்டின் அருகே தூக்குப்போட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருமண ஏற்பாடுகள்

பெங்களூரு திப்பசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் ரங்கசாமி(வயது 60). இவரது மகன் மோகன் குமார்(29). இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் முடிவு செய்தார்கள். இதையடுத்து மோகன் குமாருக்கும், காவியஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

அடுத்த சில நாட்களில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். இதற்காக மோகன் குமார் குடும்பத்தினர், பெண் வீட்டாருக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பெண் வீட்டினர் திடீரென மோகன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து சில காரணங்களை கூறி திருமணத்தை நிறுத்துவதாக கூறினர். மேலும், மோகன் மற்றும் அவரது பெற்றோரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி உள்ளனர். கொடுத்த பணத்தை கேட்டபோது, பணத்தை திருப்பிதர முடியாது என கூறி உள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த மோகன் மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

உடனே அவர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் அவர் அந்த பெண் வீட்டின் அருகே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தூக்கில் தொங்கியதை கண்டதும் அக்கம்பக்கத்தினர் திப்பசந்திரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மோகன் குமாருக்கு திருமணம் நடைபெற சில நாட்களே இருந்த நிலையில், பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதும், கொடுத்த பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி அவமானப்படுத்தியதும் தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், மணப்பெண், அவரது வீட்டார் என 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story