சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது.

இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்றதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com