தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு


தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாததால், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் இதற்கான தீர்பாயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பாயம் அமைப்பது குறித்து 4 வாரங்களுக்குள் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தென்பெண்ணை ஆற்று நதிநீர் பங்கீடு தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் பெறும் வகையில் 4 அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பாயம் தொடர்பான இறுதி முடிவுகளை அளிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை அடுத்த மார்ச் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story