மோடி குறித்த அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை... குஜராத் கோர்ட்டு தீர்ப்பு..!


மோடி குறித்த அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை... குஜராத் கோர்ட்டு தீர்ப்பு..!
x
தினத்தந்தி 23 March 2023 11:32 AM IST (Updated: 23 March 2023 5:35 PM IST)
t-max-icont-min-icon

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.

சூரத்,

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல்காந்தி, தனது தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருக்கு தண்டனையை நிறுத்திவைத்து தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என காங்கிரஸ் தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அல்லது வழக்கையே தள்ளுபடிசெய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story